ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் பெண் ஊழியர்களுக்கும், ஆண் ஊழியர்களுக்கும்
விடுப்பை அதிகரித்து, ஏற்கனவே மத்திய அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது.
நமது BSNL ஊழியர்களுக்கும் இந்த வசதியை விஸ்தரிக்க, நமது மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, BSNL நிர்வாகம்
20/03/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.
அதன்படி, பெண் ஊழியர்களுக்கு தற்போதுள்ள 135 நாள் விடுப்பு 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் PATERNITY LEAVE தந்தையர் விடுப்பு அளிக்கப்படும். குழந்தையை தத்து எடுத்த ஆறு மாத காலத்திற்குள் தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை இல்லாதவர்களும், 2 குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவர்களும், குழந்தையைத் தத்து எடுத்தால் இந்த விடுப்புச் சலுகை உண்டு.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
BSNL உத்தரவு காண இங்கே சொடுக்கவும்