TNTCWU ஆத்தூர் கிளையின் மாநாடு, 20.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் சதிஷ் தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.
TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், மூத்த தோழர் V. சின்னசாமி, BSNLEU மாவட்ட உதவி தலைவர் தோழர் P . குமாரசாமி, மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், ஆத்தூர் ஊரக கிளை செயலர் தோழர் G.R .வேல்விஜய், ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் லட்சுமணன் தலைவராகவும், தோழர் சதிஷ் செயலராகவும், தோழர் குமரேசன் பொருளாளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் பழனியப்பன் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்