TNTCWU திருச்செங்கோடு கிளை கூட்டம், 23.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்
A . கோபால், தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.
TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், திருச்செங்கோடு நகர கிளை செயலர் தோழர் M . ராஜலிங்கம், பள்ளிபாளையம் கிளை செயலர் தோழர்
V. பரந்தாமன், ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.
கூட்டத்தில், 09.04.2017 அன்று கிளை மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தோழர் சரவணன் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்