15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில், 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து, வாயிற் கூட்டங்கள் நடத்தி "கவன ஈர்ப்பு தினம்" அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 05.04.2017 அன்று நமது மாவட்டத்தில் BSNLEU - SNEA - AIBSNLEA சங்கங்கள் இணைந்து அனைத்து கிளைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிளைகளுக்கு கோரிக்கை அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தோழமை சங்கங்களை அணுகி, போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
சேலம் நகர கிளைகள் இணைந்த ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்கு சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெறும்.
கோரிக்கைகள்:
1. BSNL ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் செய்திடுக!
2. 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்திடுக!
3. நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமுலாக்கிடுக !
4. வாங்கும் அடிப்படை ஊதியத்தை அடிப்படையில், ஓய்வூதிய பங்கீட்டை கணக்கீடுக!.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்.!!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கோரிக்கை அட்டை காண இங்கே சொடுக்கவும்