செப்டம்பர் 2, 2016 பொது வேலை நிறுத்தத்தையொட்டி, மத்திய தொழிலாளர் அமைச்சர், ஒப்பந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், புதிய சம்பளம் பற்றிய உத்தேச அறிவிப்பை 01.09.2016 அன்று வெளியிட்டார். பின்னர் 19.01.2017 அன்று அந்த அறிவிப்பு அரசிதழாக (GAZETTE NOTIFICATION) வெளியிடப்பட்டது. இதை BSNL நிர்வாகம் உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று BSNLEU, TNTCWU, BSNLCCWF மாநில, மத்திய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
நமது மத்திய சங்கங்கள் நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, 22.02.2017 அன்று நாடாளுமன்றம் நோக்கி சக்தி மிக்க பேரணி நடத்தியது. நடத்தப்பட்ட பேரணி மற்றும் அதற்கு பின் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
35 வது தேசியக் குழு (NATIONAL COUNCIL) கூட்டத்திலும் இந்த கோரிக்கையை ஒரு பிரச்சினையாக BSNLEU சங்கம் கொடுத்திருந்தது. தமிழ் மாநில நிர்வாகத்துடனும் இப்பிரச்சினை மீது நீண்ட விவாதம் நடத்தப்பட்டு வந்தது. கார்ப்பரேட் அலுவலகம் வழிகாட்டுதல் பெற்று மாநில நிர்வாகம், 07.03.2017 அன்று, அனைத்து மாவட்டங்களுக்கும் அரசிதழை அமுல்படுத்தும் படி கடிதம் அனுப்பி விட்டது.
புதிய சம்பள உத்தரவை விரைந்து வெளியிட, மாவட்ட நிர்வாகத்தை, நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 06.04.2017 அன்று முதன்மை பொது மேலாளரை நேரில் சந்தித்து உத்தரவை விரைந்து வெளியிட கோரினோம். 11.04.2017 அன்று மீண்டும் DGM (Plg) மற்றும் AGM (HR/Admn) ஆகியோரை சந்தித்து பிரச்சனையை விவாதித்தோம்.
நமது தொடர் முயற்சியின் பலனாக, இன்று 13.04.2017, தமிழ் புத்தாண்டு பரிசாக, ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய சம்பள உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, 19.01.2017 முதல் ஊரக பகுதிகளில், பணிபுரியும் UNSKILLED ஊழியருக்கு 350 ரூபாய் மற்றும் சேலம் நகர பகுதிகளில் பணிபுரியும் UNSKILLED ஊழியருக்கு 437 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும்.
புதிய உத்தரவின் மூலமாக ஒவ்வொரு ஊழியருடைய சம்பளத்திலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 100 / 125 உயர்வு கிடைக்கும். மாதச் சம்பளத்தில் ரூபாய் 2600 / 3250 உயர்வு கிடைக்கும். 19.01.2017 சம்பள நிலுவையும் கிடைக்கும்.
UNSKILLED LABOUR 19.01.2017 முதல்
சேலம் நகர பிரிவு தினக்கூலி ரூ.437
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தினக்கூலி ரூ.350
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நகர பகுதி உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
ஊரக பகுதி உத்தரவு காண இங்கே சொடுக்கவும்