Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 11, 2017

20 வருடம், 30 வருடம் சேவை முடித்த ஊழியர்கள் கௌரவிப்பு

Image result for gift


09.03.2017 அன்று நடைபெற்ற சேம நல நிதி வாரிய கூட்டத்தில், 30 வருடம் மற்றும் 20 வருடம் சேவை முடித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கௌரவிக்க, BSNLEU சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தோம்.  30 வருடம் சேவை முடித்த ஊழியர்களுக்கு ரூ. 3000 மற்றும் 20 வருடம் சேவை முடித்த ஊழியர்களுக்கு ரூ. 2000 வழங்க, கூட்டத்தில் முடிவு எடுக்க வைத்தோம். 

அதன்படி, இன்று (11.04.2017) மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவு வெளியிடப்பட்டது. 395 ஊழியர்கள்/அதிகாரிகள் 30 வருடம் சேவை முடித்ததற்க்காக ரூ.3000 மும் 490 ஊழியர்கள்/அதிகாரிகள் 20 வருடம் சேவை முடித்ததற்காக ரூ.2000 மும் பரிசு தொகை பெற உள்ளனர். மொத்தம் ரூ.21,65,000 பட்டுவாடா செய்யப்படவுள்ளது. 

நமது கோரிக்கையை ஏற்று, உத்தரவு வெளியிட்ட, மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. ஊழியர்கள் GM அலுவலகத்தில் இந்த தொகையை பெற்று கொள்ளலாம். பட்டுவாடா துவங்கிவிட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

30 வருடம் சேவை முடித்தவர்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
20 வருடம் சேவை முடித்தவர்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும் 
30 வருடம் - உத்தரவு காண இங்கே சொடுக்கவும் 
20 வருடம் - உத்தரவு காண இங்கே சொடுக்கவும்