BSNL ஊழியர்களும், ஓய்வூதியர்களும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வவுச்சர் இல்லாமல், வெளி நோயாளி மருத்துவ சிகிச்சைக்கான அலவன்ஸ், BSNLMRS திட்டத்தின் அடிப்படையில் பெற்று வந்தனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இந்த சலுகை, BSNL நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 31வது தேசிய கவுன்சிலில் அஜெண்டா கொடுக்கப்பட்டது. இருப்பினும் தடை நீடித்தது. தற்போது, செயல்பாட்டு லாபத்தில் நிறுவனம் செல்வதால் இந்த கோரிக்கைக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்து நமது மத்திய சங்கம் பேசி வந்தது.
நமது கோரிக்கை தற்போது, பாதி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த சலுகையை மீண்டும் வழங்கிட, BSNL நிர்வாகம் 11.04.2017 அன்று உத்திரவிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிஓய்வின்போது பெற்ற கடைசி மாதச்சம்பளத்தில் (அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படி, BASIC PAY + IDA) பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்.மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு பிறகு, திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும்.
பணியில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. BSNLEU மத்திய சங்கம் நிச்சயம், ஊழியர்களுக்கு இந்த சலுகையை பெற்று தரும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்