டில்லியில் 41 நாட்களாக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக, 25.04.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த மாநில சங்கங்கள் அறைகூவல்
கொடுத்திருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று, 25.04.2017 மாநிலம் முழுவதும் பந்த் நடத்த அரசியல் கட்சிகள் அறைகூவல் கொடுத்திருந்தன. அதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும், அனைத்து கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் நகர கிளைகளை மையப்படுத்தி, GM அலுவலகம் முன்பு, இன்று, 25.04.2017, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். போராட்டத்தில், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் காளியப்பன், (சேலம் MAIN), வெங்கடேசன்(மெய்யனுர் OD ), பழனிமுத்து (மெய்யனுர் TRA), இளங்கோவன் (செவ்வை), செவ்வை கிளை தலைவர் தோழர் முருகேசன், சிறப்பு அழைப்பாளர் தோழர் ஜோதி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் (8 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
திருச்செங்கோடு கிளை படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
அனைத்து சங்கங்கள் சார்பாக