19.04.2017, இன்று, ஓமலூரில் BSNLEU கிளை கூட்டம் மற்றும் TNTCWU கிளை மாநாடு இணைந்து நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு, தோழர் N . கௌசல்யன், கிளை தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M . செல்வகுமார், கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், துவக்கவுரை வழங்கினார். TNTCWU மாநில உதவி தலைவர் தோழர் செல்வம், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர் செல்வம், P . செல்வம், S. சேகர், M . சண்முகம், இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் A . கந்தசாமி, GM அலுவலக சிறப்பு அழைப்பாளர் தோழர் முருகேசன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இறுதியாக நடைபெற்ற TNTCWU ஓமலூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர் B . பாஸ்கர், தலைவராகவும், தோழர் R . ராமசாமி, செயலராகவும், தோழர் P . குமார் பொருளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர் காட்டுராஜா கிளை பொருளர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். மாநாட்டில் சுமார் 40 தோழர்கள் கலந்து கொண்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்