TNTCWU செவ்வை கிளையின் மாநாடு, 01.04.2017 அன்று கொண்டலாம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் வீரேஷ்குமார், JE தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் M .செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.
TNTCWU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், செவ்வை கிளை செயலர் தோழர் இளங்கோவன், இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்
M. செல்வம் தலைவராகவும், தோழர்
A . ஜெய்சங்கர் செயலராகவும், தோழர்
M . மணி பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் செந்தில்குமார் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்