19/05/2017 காலை 10 மணி 25 நிமிடத்திற்கு ஈரோடு நகரில் நமது BSNLEU மாநில சங்கத்தின் 8 வது மாநாடு துவங்கியது. மாநில தலைவர் தோழர் S . செல்லப்பா தலைமையில் துவங்கிய மாநாட்டில், முதல் நிகழ்வாக, மாநாட்டு அரங்கத்தின் வாயிலில் தேசிய கொடியும் மற்றும் நமதுசங்க கொடியும் தோழர்களின் விண்ணதிர்ந்த கோஷங்களிடையே ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிவுரை, வரவேற்புரை, நிகழ்விற்கு பின், BSNLEU வின் தமிழ்மாநில மாநாட்டினை அகிலஇந்திய பொதுசெயலாளர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் துவக்கிவைத்து எழுச்சிமிகு உரையாற்றினார்.
இரண்டு நாளும் சார்பாளர் மாநாடாக நடந்தது. 19.05.2017 மாலையில் நடைபெற்ற பொது அரங்கில் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் . தமிழ் மாநில முதன்மை பொது மேலாளர் திருமதி. பூங்குழலி, கலந்து கொண்டு சேவை சம்மந்தமான கருத்துக்களை வழங்கி, மாநாட்டை வாழ்த்தினார்.
தோழர் கருமலையன் சிறப்புரை - கருத்து
மோடியின் கனவாம்-'டிஜிட்டல் இந்தியா'.அதற்கு அம்பானியின் சமர்பனமாம் 'ஜியோ' எனும் 1,50,000 கோடி முதலீட்டிலான திமிங்கலம். கையையும், கண்ணையும் கட்டிப்போட்டு விட்டு BSNL இவர்களோடு போட்டி போட்டு பிழைத்துகொள்ள ஆளும் வர்க்கம் சபித்துவிட்டது.இதை BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து எதிர்கொண்டனர். தெருத்தெருவாக சிம்கார்டு விற்பனை உட்பட சேவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவன நஷ்டத்தை குறைத்தனர். லாபத்தை நோக்கி பயணிக்க உள்ளது .பொதுத்துறை பாதுகாப்பில் புது அத்தியாயம் படைத்த BSNLஊழியர் சங்க மாநில 8வது மாநாடு. ஈரோட்டில். ஊதியம், சலுகைகள் மீதான விவாதித்தைவிட 'தேசம் காக்க -பொதுத்துறை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை மாநாடு முழுக்க கண்டேன். என சிஐடியூ சார்பாக தோழர் கருமலையான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வு
இரண்டாம் நாள் துவங்கிய சார்பாளர் விவாதத்திற்கு மத்தியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் தோழர் சம்பத் சிறப்புரை வழங்கினார். பின்னர், மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டு நிதியாக, சார்பாளர்களிடம் துண்டு ஏந்தி வசூல் செய்ததில், வசூலான நிதி சுமார் ரூபாய் 20000 தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் தோழர் சம்பத், அவர்களிடம் வழங்கப்பட்டது.
நமது மாவட்டம் சார்பாக, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர் விவாதத்தில் பங்கு பெற்றனர். தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் சேலம் உருக்காலை தனியார்மய நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் போராட்டங்கள் சம்மந்தமாக சிறப்புரை வழங்கினார்.
மாலையில், விவாதம் முடிவுற்றபின், மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், விவாதத்திற்கு பதில் அளித்து தொகுப்புரை வழங்கினார். மத்திய சங்கம் சார்ப்பான கேள்விகளுக்கு நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு பதில் அளித்தார்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் S . செல்லப்பா, A . பாபு ராதா கிருஷ்ணன், K . ஸ்ரீனிவாசன், முறையை தலைவர், செயலர், பொருளராக தேர்வு செய்யப்பட்டனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய மாநில சங்க நிர்வாகிகளின் பனி சிறக்க நமது தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்