11.05.2017 அன்று டில்லியில், தேசிய கவுன்சில் கூட்டம், மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் தலைமையில் நடைபெற்றது. 7வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின், நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆய்படு பொருள்களை விவாதிப்பதற்கு முன்பு, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ கீழ்கண்ட கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கும், தீர்விற்கும் முன் வைத்தார். நிர்வாகமும், பரிசீலிப்பதாக கூறியுள்ளது.
1. ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழு, உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
2. ஓய்வூதியர்களுக்கு வழங்கியது போல், ஊழியர்களுக்கும் தரை வழி இணைப்புகளிலிருந்து, இரவு நேர இலவச அழைப்பு வசதி வழங்க வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்/அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில், ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது.
4. ஊழியர்களின் பிரதான பிரச்சனைகளான, E1 சம்பள விகிதம், ஒரு கூடுதல் இன்க்ரிமெண்ட், தற்காலிக ஊழியர்களுக்கு பணிக்கொடை உடனடியாக தீர்க்க வேண்டும்.
5. அனாமலி பிரச்சனை தீர்க்க பட வேண்டும்.
6. உடனடியாக, JE இலாக்கா போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
7. JAO தேர்வு முடிவுகள் மறு பரிசீலனை செய்யப்பட்ட தோழர்களுக்கு, பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
8. ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அறக்கட்டளைகளில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பிரதிநிதித்துவம் படுத்த பட வேண்டும்.
9. அலுவலக வளாகத்திற்குள் போராட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்க பட வேண்டும்.
பின்னர், கீழ்கண்ட விவாத பொருள்கள் விவாதிக்கப்பட்டது.
1. ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் விவாதிக்க முடியாது என்ற உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும்...
மாநில நிர்வாகங்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களும், நலத்திட்டங்களும் அமுலாக்கப்படுவது பற்றி மாதந்தோறும் தலைமயகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல எனவும், இது சம்பந்தமாக மாநில நிர்வாகங்கள் உரிய வகையில் அறிவுறுத்தப்படும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.
2. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TM போட்டி தேர்வில் பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மட்டுமே பங்கு கொள்ளமுடியும் என்ற விதி....
பத்தாம் வகுப்பு தகுதியைத் தளர்த்துவதற்கு போன்மெக்கானிக் ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே அடுத்த தேர்வில் இது பற்றி பரிசீலிக்கப்படும்.
3. நீதிமன்ற உத்திரவான SR.ACCOUNTANT சம்பள விகிதம் உயர்த்துதல் மற்றும் தகுதி உயர்த்துதல்...
DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அமுல்படுத்தப்படும்.
4. 22/07/1997 முதல் 03/10/2000 வரை இலாக்காப்பதவி உயர்வுத்தேர்வுகளில் SC/ST ஊழியர்களுக்கு சலுகை...
சிக்கலான பிரச்சினையாகும். ஆனாலும் தனிநபர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
5. SC/ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு...
தளர்வு செய்வது பற்றிய DOTயின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.
6. 2015ல் நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை...
பரிசீலிக்கப்படும்.
7. DCRG உச்சவரம்பு...
உயர்த்தப்பட்டுவிட்டது.
8. தேக்கநிலை ஊதியம்...
சங்கங்களின் ஆலோசனை பரிசீலிக்கப்படும்.
9.வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பங்களிப்பு...
BSNL நிர்வாகத்தால் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
10. நிலுவைப்பிடித்தம் சம்பந்தமாக...
அனைத்து மாவட்டங்களிலும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அதுவரை நிலுவைப்பிடித்தம் நிறுத்தி வைக்கப்படும்.
11. BSNL நியமன ஊழியர்களிடம் முன் தேதியிட்டு EPF பங்களிப்பு பிடித்தம்...
EPF விதிகளுக்கு முரணானது என்பதால் முன்தேதியிட்டு பிடித்தம் செய்வது தவறு என்ற ஊழியர் தரப்பு வாதம் பற்றி பரிசீலிக்கப்படும்.
12. BSNL ஊழியர்களின் அரசியல் தொடர்பு...
ஊழியர்களுக்கு அரசியல் தொடர்பு கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மாற்றுவது பற்றி மற்ற பொது துறை நிறுவனங்களின் CDA விதிகள் ஒப்பிட்டு, பின் முடிவு எடுக்கப்படும்.
நேரமின்மை காரணமாக எஞ்சிய ஆய்படு பொருள்கள் விவாதிக்கப்படவில்லை.
விரைவில் அடுத்த கூட்டம் கூட்டப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்