நமது மாவட்ட சங்கத்தின் " கிளை செயலர்கள்" கூட்டம், 13.05.2017 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். தோழர் P . செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் வரவேற்புரை வழங்கினார்.
கூட்டத்தை, மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், விளக்கவுரை வழங்கினார்.
மாநில செயற்குழு முடிவுகள், 35 வது தேசிய கவுன்சில் முடிவுகளை தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் விளக்கி பேசினார். பின்னர் நடைபெற்ற விவாதத்தில், 18 கிளை செயலர்கள் பங்குபெற்றனர்.
விவாதத்திற்கு, பதில் அளித்து மாவட்ட செயலர் தோழர் E . கோபால், உரை நிகழ்த்தினார். கிளைகளுக்கு மாநில மாநாடு "சார்பாளர்கள் எண்ணிக்கை" விவரம் தெரிவிக்கப்பட்டது.
மாநில மாநாட்டில், மாநில சங்கம் அனுமதித்த அளவில், சார்பாளர்கள் மட்டும் கலந்து கொள்வது, கிளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாநில மாநாடு நிதி கோட்டாவை 18.05.2017 க்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது, உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, மாநில மாநாடு நிதி வரவு விவரங்கள் தெரிவித்தபின், தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்