மனித குலத்தின் மகத்தான மாமேதை காரல் மார்க்ஸின் 200வது ஆண்டு இன்று துவங்குகிறது.
வானவில் வரைந்த ஓவியம்...
பூமி கண்டெடுத்தபுதையல்...
அறிவு-தனைஅளக்கும் அளவுகோல்...
பொருளின் பொருள் உரைத்த,
பொருளற்றவர்களின் பொருள்...
உபரி மதிப்பைகண்டுபிடித்த உன்னத மதிப்பு...
வேர்வையே உயிர்ப்பின்வேர் என்றறிவித்த மேதை...
உழைப்பின் மதிப்பைகண்டுபிடித்த உழைப்பு...
வறுமை விரட்டியபோதும்
வறுமையை விரட்டும் வழிசொன்னவர்...
நாடற்றவர் என அறிவிக்கப்பட்டாலும்,
எல்லா நாடும் நாடியவர்...
நிலப்பரப்பின் வரப்புகளைதகர்த்த கலப்பை...
கண்ணீரில் வாழ்கிறார் கடவுள்
என்று சொன்ன மனிதன்...
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்
மூலதனப் பெருங்குவியல்...
அடிமைச் சங்கிலிகளைஉடைத்தெறியும் சுத்தியல்...
ஆளும் வர்க்கத்தின்வேரறுக்கும் அரிவாள்...
இதயத்தில் பாதியை ஜென்னிக்கும்,
மூளையில் பாதியை ஏங்கெல்சுக்கும் தந்தவர்...
சமத்துவ பொன்னுலகைசாத்தியமாக்கும் சாவி...
பரிணாமத்தின் உச்சம் மனிதம்!
மனிதத்தின் உச்சம் மார்க்ஸ்!!
- மதுக்கூர் ராமலிங்கம்