Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, May 15, 2017

மிதிவண்டி பராமரிப்பு படி (CMA) பட்டுவாடா - 2 வது பட்டியல்

Image result for cycle maintenance


தணிக்கை குழுவின் எதிர்மறை பரிந்துரையை காரணம் காட்டி, நமது மாவட்டத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி பராமரிப்பு படி, CMA (Cycle Maintenance Allowances) திடீரென நிறுத்தப்பட்டது. 

உடனடியாக, மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து நாம் பேசினோம். பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியபிறகு, தல மட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினால், மீண்டும் படிகள் பட்டுவாடா செய்யப்படும் என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி, முதல் தவணையாக சான்றிதழ் பெறப்பட்ட 162 ஊழியர்களுக்கு CMA பட்டுவாடா உத்தரவு 21.04.2017 அன்று வெளியிடப்பட்டது.  எஞ்சியுள்ள ஊழியர்களின் (சான்றிதழ் கிடைக்க பெற்றவர்களின்) அடுத்த பட்டியலை வெளியிட கோரினோம். தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு இரண்டாவது பட்டியல் நிர்வாகத்தால் இன்று 15.05.2017 வெளியிடப்பட்டுள்ளது.  

கிளை செயலர்கள் இந்த பட்டியலையும் சரிபார்த்து, விடுபட்ட தோழர்களுக்கு படிகள் பெற, உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது. நமது கோரிக்கையை ஏற்று, உத்தரவு வெளியிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.

தோழமையுடன்,
E . கோபால்,  
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்