சாதி ஆணவ படுகொலையைத் தடுக்கத் தனிச்சட்டம் கேட்டு, தமிழக தீண்டாமை முன்னணி சார்பில், 9.6.17 முதல் 23.6.17 வரை, சேலம் முதல் சென்னை வரை, 15 நாட்கள் 369 கிமீ நடைப்பயணம் எழுச்சியுடன் சேலத்தில் மாநில செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் 9.6.17 அன்று துவங்கியது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னை செல்லும் இரண்டாவது நாள் நடைபயணம், 10.06.2017, நேற்று, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளைம் வழியாக ஆத்தூர் வந்தடைந்த்து. ஏராளமான அமைப்பினர் பொது மக்கள் வரவேற்றனர்.
BSNLEU ஆத்தூர் கிளைகள் சார்பாக தோழர் S . ஹரிஹரன் (மாவட்ட உதவி செயலர்), தோழர்கள் G. R. வேல்விஜய், A . அருள்மணி, (கிளை செயலர்கள்) பயணக்குழுவை வரவேற்று பொது கூட்டத்தில் பங்கு பெற்றனர். பயணக்குழுவில் பயணம் செய்யும் BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் V. மணியன் அவர்களை ஆத்தூர் கிளைகள் கௌரவப்படுத்தியது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்