UNIONS & ASSOCIATIONS OF BSNL சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, மத்திய சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, நாடு தழுவிய தர்னாவின் ஒரு பகுதியாக, சேலத்தில் 20.06.2017 அன்று "மாலை நேர தர்ணா" சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன்,(BSNLEU), V.சண்முக சுந்தரம்,(SNEA) கூட்டு தலைமை தாங்கினர்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.
NUBSNLW FNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன் போராட்ட பந்தலுக்கு வந்து வாழ்த்துரை வழங்கி, ஆதரவு நல்கினார்.
SNEA CEC உறுப்பினர்கள் தோழர்கள் பழனிசாமி, ஸ்ரீனிவாசன், இளங்குமரன், SNEA மாவட்ட பொருளர் தோழர் சேகர், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பின்னர், SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இறுதியாக, தோழர் M . சண்முகம், BSNLEU மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, கடுமையான மதிய வெயிலையும், இடையூறான மாலை மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் வெற்றிபெற உழைத்த கிளை சங்கங்களுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்