Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 15, 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

TNTCWU தமிழ் மாநில சங்க அறைகூவலுக்கிணங்க, 14.06.2017 அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் தலைமை தாங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் துவக்கவுரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். போராட்டத்தில், சுமார் 120 தோழர்கள் (10 பெண்கள்) உட்பட கலந்து கொண்டனர். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

போராட்டத்திற்கு பின்,  DGM HR/Admn, AGM HR/Admn ஆகியோரை நேரில் சந்தித்து சம்பளம் பட்டுவாடா சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. 

பின்னர், BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், TNTCWU அவசர மாவட்ட செயற்குழு கூட்டப்பட்டது. அதில், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் பேச்சு வார்த்தை விவரங்கள், நமது நிலைபாடு, போராட்ட திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்