ஜூன் 16-இல் பெட்ரோல் பங்குகளை மூடும் டீலர்கள்
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் விலையை தினமும்நிர்ணயம் செய்யும் முடிவுக்கு, பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித் துள்ளது.மேலும், ஜூன் 16-ஆம் தேதி பெட்ரோல் பங்குகளை மூடி போரா ட்டம் நடத்தப் போவதாகவும் டீலர்கள் அறிவித்துள்ளனர்.இந்தியாவில் பெட்ரோல் - டீசல்விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளஆட்சியாளர்கள் அனுமதி வழங்கி யுள்ளனர். அதன்படி மாதத்துக்கு இரண்டுமுறை விலை நிர்ணயம் செய்து வந்த எண்ணெய் நிறுவ னங்கள், தற்போது தினமும் விலையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன.ஜூன் 16-ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவித் துள்ளன.இந்நிலையிலேயே, எண்ணெய்நிறுவனங்களின் இந்த முடிவுக்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவி த்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அந்த கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்தால் டீலர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும். இந்த திட்டம் பரீட்சார்த்தமாக அமல்படுத்தப்பட்டுள்ள 5 நகரங்களில் டீலர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கையை சுட்டுக்கொண்டமாதிரி அவர்கள் அவஸ்தைக் குள்ளாகி இருக்கிறார்கள்.இந்த நிலையில் திடீரென 16-ந்தேதி முதல் பெட்ரோல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். அது எங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை.
எனவே இந்த முடிவை ஏற்க இயலாது.இந்த விஷயத்தில் மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து, டீலர்கள் நஷ்டம் அடையாதபடி ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 16-ந் தேதி முதல் தினமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.இதையும் மீறி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டால், அது பெட்ரோல் விற்பனை டீலர்களை இருளில் தள்ளி விடும். எனவே பெட்ரோல் நிலையங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளா விட்டால், 16-ந் தேதி நாங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யமாட்டோம். எண்ணெய் நிறுவ னங்களில் இருந்தும் பெட்ரோலியப் பொருட்களை வாங்க மாட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று இறுதி முடிவு?
தமிழ்நாட்டில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 16-ந்தேதி மூடப்படுமா? என்பது குறித்து, தமிழ்நாடு - புதுச்சேரி பெட்ரோல் விற்பனை வணிகர்களின் சங்கத்தலைவர் கே.பி.முரளி பேட்டி யளித்துள்ளார்.அதில், செவ்வாயன்று எண் ணெய் நிறுவனங்களுடன் நடை பெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, தமிழகம் - புதுச்சேரியில்பங்குகளை மூடுவது குறித்துதெரியவரும் என்று குறிப்பிட்டுள் ளார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் 4,850 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.