நமது மாவட்ட சங்கத்தின் " கிளை செயலர்கள்" கூட்டம், 17.06.2017 அன்று, மாவட்ட சங்க அலுவலகத்தில்,சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர், தோழர் M . விஜயன் தலைமை தாங்கினார்.
அம்மாபேட்டை கிளை உதவி தலைவர் தோழர் P. K. சதாசிவம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியபின், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், வரவேற்புரை வழங்கினார்.
BSNLEU 8வது தமிழ் மாநில மாநாட்டில், மாநில நிர்வாகியாக, நமது மாவட்ட உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, சேலம் மாவட்ட சங்கம்
சார்பாக கௌரவிக்கப்பட்டார். பின்னர், தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர், கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, சிறப்புரை வழங்கினார். விவாதத்தில், 22 கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.
இறுதியாக, தோழர் S . ஹரிஹரன், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில், 3வது ஊதிய மாற்ற கூட்டு இயக்கங்கள், Long stay பணி மாறுதல், ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை, 8வது தமிழ் மாநில மாநாடு பரிசீலனை, உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை ஓமலூரில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்