Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 3, 2017

போராட்ட களம் காண்போம்! ஊதிய மாற்றம் பெறுவோம்!!

Image result for வேலை நிறுத்தம்



02.06.2017 அன்று அனைத்து தொழிற்சங்க கூட்டம், புது டில்லியில் நடைபெற்றது. AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலாத்ராய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, BSNLMS, ATM, BTU, BSNLOA, சங்கங்களின் நிர்வாகிகள்/தலைவர்கள் கலந்து கொண்டனர். நமது பொது செயலர் தோழர் P. அபிமன்யு, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி,பொருளர் தோழர் கோகுல் வோரா ஆகியோர் நமது சங்கம் சார்பாக கலந்து கொண்டனர். 

01.01.2017 முதல் செய்யப்பட வேண்டிய ஊதிய மாற்றம் சம்மந்தமாக அரசாங்கத்தின் நிலையினை கூட்டம் விவாதித்தது. அரசாங்கம் நமக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வருவதால், ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊதிய மாற்றம் செய்ய மறுப்பதால், கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்ட களம் காண்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


கோரிக்கைகள் 

01. 2017 ஜனவரி 1 முதல் செய்யப்பட வேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்!

02. நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்!

03. நமது நிறுவனத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் கார்ப்பரேட் அலுவலக 08.05.2017 தேதியிட்ட கடிதத்தை நிபந்தனையில்லாமலால் திரும்ப பெறு!!!


இயக்கங்கள் 

20.06.2017 - நாடு தழுவிய தார்னா 
13.07.2017 - ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பு 
27.07.2017 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 

தோழர்களே! நாம் போராடாமல் பெற்றதில்லை! போராடி தோற்றதில்லை!!..எனவே, இந்த வாழ்வா சாவா போராட்டத்திற்கு உடனடியாக தயாராகுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்