அ.சவுந்தரராசன், சிஐடியு மாநிலத் தலைவர்
விவசாயிகள் ஒருபக்கம் வறட்சி, பண மதிப்பு நீக்கம் போன்றவற்றால் வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் அருண்ஜெட்லி கூறுகிறார், விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு எந்த காரணங்களை முன்னிட்டும் தள்ளுபடி செய்யாது என்று.
அதேநேரம் கடந்த, 11 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக, ரூ.42 லட்சம் கோடியை மத்திய அரசுகள் தள்ளுபடி செய்துள்ளன. ஆனால், வெறும் 75 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்கிறார்கள்.
இதன் எதிரொலியாக விரைவில் விவசாயம் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.