சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் சிறப்பு சட்டம் கோரி, தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சேலம் முதல் சென்னை வரை 360 கி.மி. நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இன்று, 9.6.17 காலை 11 மணிக்கு வேகாத வெயிலை வேக வைக்கும் 360 கிமீ நடைப்பயணம் தொடங்கும் என அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியில், நமது BSNLEU சங்கமும் ஒரு அங்கம் என்ற முறையில், நிகழ்விற்கு நாமும் சென்றிருந்தோம்.
நடைபயணம் எழுச்சியுடன் சேலத்தில் மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் துவங்கியது! விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பி.சம்பத் பயணத்தை முறைப்படி துவக்கி வைத்தனர். சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையிலிருந்து பயணம் துவங்கியது.
துவக்க விழா நிகழ்வில், BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் கோபால், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் பண்ணீர் செல்வம், செல்வம், பாலகுமார் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
நடைப்பயணத்தில் நமது தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் V.மணியன் சென்னை வரை பயணம் மேற்கொள்ள உள்ளார். தோழரை சந்தித்து கௌரவப்படுத்தினோம்.
இயக்கம் வெற்றி பெற நல் வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்