TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு, 10.06.2017 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், தலைமை தாங்கினார். மெய்யனுர் கிளை செயலர் தோழர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், TNTCWU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் கருத்துரை வழங்கினர்.
இறுதியாக, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார்.
சம்பள பிரச்சனை, சந்தா, மாநில செயற்குழு முடிவுகள், பணி திறனுக்கேற்ற கூலி, போராட்டங்கள், இயக்கங்கள், உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்