13.07.2017 அன்று சேலத்தில், மத்திய சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, ஊதிய மாற்றம் கோரி, உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன் (BSNLEU), V. சண்முகசுந்தரம் (SNEA) கூட்டு தலைமை தாங்கினர்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். SNEA மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் M .R .தியாகராஜன், K . G. நாராயணகுமார், ஸ்ரீனிவாசன், பழனிசாமி, BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம், தங்கராஜு, ராமசாமி, செல்வராஜூ, செல்வம், பன்னீர்செல்வம், சார்லஸ் பிரேம்குமார், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார்கள்.
BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக பங்குபெற்றனர். ஊழியர்களை திரட்டி, போராட்டத்தை வெற்றி பெற செய்த கிளை சங்கங்களுக்கு, இரண்டு மாவட்ட சங்கங்களின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்