Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 26, 2017

"திறனுக்கேற்ற கூலி" - ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மை வரையறுக்கப்பட்டது.

Image result for bsnl contract workers

ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் "திறனுக்கேற்ற கூலி" வழங்கப்பட வேண்டும் என நமது சங்கம் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் கொடுத்த புகாரின் இறுதிக்கட்ட சமரசப்பேச்சுவார்த்தை இன்று, 26/07/2017 நடைபெற்றது.  

Dy Chief Labour Commissioner முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், TNTCWU சங்கமும், BSNL நிர்வாகமும் கலந்து கொண்டது. நமது கோரிக்கையான  Categorisation of Contract Labourers என்பதை ஏற்றுக் கொண்டதாக நிர்வாகம் தெரிவித்தது.  இது சம்பந்தமாக 24.07.2017 தேதியிட்ட, உத்தரவை தொழிற்சங்கத்திடம், நிர்வாகம் அளித்தது. 

BSNLEU மற்றும் TNTCWU சங்கத்தின்சார்பாக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவும், தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் காரணமாகவும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணித்தன்மை அடிப்படையில் RECATEGORIZATION செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

இது மகத்தானது, போற்றத்தக்கது, கொண்டாட 
படவேண்டியது. ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

வெற்றி வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்