திருநெல்வேலியில், இன்று, (15.07.2017), BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு காலை 10.00 மணிக்கு துவங்கியது. BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி தலைமை தாங்கினார். கொடியேற்றம், அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி பேசினார்.
BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார். 27.07.2017 ஒரு நாள் வேலைநிறுத்தம், ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ் மாநிலத்தில் வெற்றி பெற செய்ய அயராது உழைப்பது என செயற்குழு சூளுரை எடுத்தது.
நமது மாவட்டம் சார்பாக, தோழர் R. ரமேஷ், கிளை செயலர், வேலூர் விவாதத்தில் பங்குபெற்றார்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்