Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, July 23, 2017

ஒப்பந்தத் தொழிலாளிக்கும் ஓய்வூதியம் கட்டாயம்!


சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு



மின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, மின் ஊழியர்களை பெரும் உற்சாகத்திற்குள் ளாக்கியுள்ளது.

1990களில் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்திற்கு வந்த பின்னர், அதன் கடுமையான பாதகங்கள் மின்துறையையும் விட்டுவைக்கவில்லை. இந்திய மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசுகள் முயன்று வருகின்றன.தமிழக மின்வாரியத்தில் நவீனதாராளமயக் கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை யை குறைத்து, ஒப்பந்த முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவ்வாறு பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்சக் கூலி, அடையாள அட்டை, ஓய்வறைகள், மருத்துவ வசதி, பென்சன் வழங்குதல் போன்ற எந்த ஏற்பாட்டை யும் அமல்படுத்த தயாரில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சலுகைகளான குறைந்தபட்சக் கூலி, அடையாள அட்டை, ஓய்வறை, மருத்துவவசதி போன்றவைகளை பெற்றுத்தர தொடர்ச்சியாக முயற்சிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு சமூக பாது காப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து மின்வாரியமும் அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன்வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பட்டியலோடு மின்வாரியத்தை சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு அணுகியது.
வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் உத்தரவு

ஆனால் வாரியமோ, மத்திய அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில் ஓய்வூதியச் சட்டம் 1952 அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி பங்கீட்டுத் தொகையை மின்வாரியம் பிடிப்பதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதிஅலுவலகத்தை அணுக, வருங்கால வைப்புநிதி அலுவலகம் மின்ஊழியர் மத்திய அமைப்பிடம் ஒப்பந்த தொழிலாளர் பட்டியலைப் பெற்றுக்கொண்டு மின்வாரியம் போன்ற நிறுவனங்களுக்கு வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திலிருந்து விலக்களிக்க முடியாது’’ என்றும் சட்டத்திருத்தம் செய்த நாளான 1.08.1988 முதல் தொகையை கணக்கிட்டு மின்வாரியம் செலுத்த வேண்டுமென ஆணையிட்டது.வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக வருங்கால வைப்புநிதி சட்டத்திலிருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையோடு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு மின்சார வாரியம். தனி அமர்வு நீதிபதியும், கூட்டமர்வு நீதிபதியும் வருங்கால வைப்புநிதி ஆணையர் வழங்கிய உத்தரவை செயல்படுத்துமாறு ஆணையிட்டார்கள்.

ஆனாலும் அத்தீர்ப்புக்கும் எதிராக தமிழக அரசும், மின்வாரியமும் 2009ல் உச்சநீதிமன்றத்தை அணுகின.2009ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில்,எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2017 ஜூலை 20 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓய்வூதியத் சட்டத்தை அமலாக்குவதில் இருந்து தமிழக மின் வாரியத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் ஊழியர்களும், வாரியமும் செலுத்த வேண்டியபங்கீட்டுத் தொகையை (சந்தா) மின்வாரியமே செலுத்தி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்ற மகத்தான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

22 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்

இந்த வழக்கில் சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 21,964 தொழிலாளிகளுக்கு இ.பி.எப் பென்சன் அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கச் செய்துள்ள இந்த மகத்தான தீர்ப்பினை மின்வாரியத்தின் உயர்வுக்காக அல்லும் பகலும் பாடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கின்ற வகையில் 2004ல் துவங்கி 2017ஆம் ஆண்டில்வெற்றிகரமாக பெற்றுத் தந்துள்ளது செங்கொடி இயக்கம்.
Image result for theekkathir