27.07.2017 - நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம், நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் நகர கிளைகளை மையப்படுத்தி, GM அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம், பரமத்தி வேலூர், நாமக்கல் கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் BSNLEU, SNEA, NUBSNLW (FNTO) சங்கங்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர்
குறிப்பு: நாடு முழுவதும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகவும், அனேக இடங்களில் CSC, தொலைபேசி நிலையங்கள், அலுவலங்கங்கள் இயங்கவில்லை என்றும், சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், நமது பொது செயலர் பத்திரிக்கை செய்தி அனுப்பியுள்ளார்.
பொது செயலர் பத்திரிக்கை செய்தி குறிப்பு காண இங்கே சொடுக்கவும்
GM அலுவலகம்
திருச்செங்கோடு
ஆத்தூர்
ராசிபுரம்
பரமத்தி வேலூர்
நாமக்கல்