27.07.2017 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் வெற்றி பெற செய்ய, ஊழியர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது என ஓமலூர் செயற்குழு முடிவு செய்தது. அதன்படி, BSNLEU / SNEA சங்கங்கள் சார்பாக, 22.07.2017 அன்று சேலம் நகர பகுதிகளில், மெய்யனுர், GM அலுவலகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் தங்கராஜு, பன்னீர்செல்வம், சேகர், செல்வம் கிளை செயலர்கள் பழனிமுத்து, வெங்கடேசன், பாலகுமார், காளியப்பன், இளங்கோவன் SNEA சார்பாக மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், பொருளர் தோழர் சேகர் உள்ளிட்ட முன்னணி தோழர்கள் ஊழியர்களை,அதிகாரிகளை நேரில் சந்தித்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரினர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்