17.06.2017 அன்று மத்திய கனரக மற்றும்
பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் திரு. அனந்த்கீத் அவர்களுக்கு, நமது மத்திய சங்கம் ஒரு கடிதம் எழுதியது. BSNL நிறுவனத்தில், 3வது ஊதிய மாற்றம் செய்ய ஏதுவாக, BSNL நிறுவனத்திற்கு மட்டும், " AFFORDABILITY" பிரிவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரியிருந்தது.
70 நாள் நீண்ட உறக்கத்துக்கு பின், நமது கோரிக்கையை "நிராகரித்து" நமக்கு கடிதம் எழுதியுள்ளது மத்திய அரசு.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, "ஒன்றுபட்ட, கடுமையான, தொடர்ச்சியான போராட்டம்" மட்டுமே, ஊதிய மாற்றம் பெற ஒரே வழி என்பதேயாகும்.
"போராட்ட வாளை" கூர்ப்படுத்துவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய அரசின் <<view letter>>கடிதம் காண இங்கே சொடுக்கவும்