நமது மாவட்டத்தில், எடப்பாடி குரூப்ஸில், ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வரும் தோழர் R . சதிஷ், (வயது 36), இன்று, 13.09.2017 காலை அவரது இல்லத்தில் இருந்து, இலாக்கா பணிக்கு, எடப்பாடி தொலைபேசி நிலையம் நோக்கி வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி, உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், எடப்பாடி கிளை தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபகங்களை உரித்தாக்குகிறோம்.
வருத்தங்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்