Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, September 17, 2017

கிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்


16.09.2017 அன்று நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M. விஜயன், தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், அஞ்சலியுறை நிகழ்த்த, மற்றுமொரு மாவட்ட உதவி செயலர் தோழர் S. ராமசாமி வரவேற்புரை வழங்கினார். 

தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 

பின்னர் விவாதத்தில் கிளை செயலர்கள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதில் வழங்கியபின், கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

01. BSNLEU - TNTCWU மாநில சங்க அறைகூவல்படி, சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு, மூன்று நாள் நடைபெறவுள்ள, உண்ணாவிரத போராட்டத்தில், 21.09.2017 அன்று நமது மாவட்டம் சார்பாக திரளாக பங்கேற்பது.

02. 2017 நவம்பர் 9 முதல் 11 வரை டில்லியில் நடைபெறவுள்ள, மத்திய சங்கங்களின் அறைகூவலான,  "தர்ணா போராட்டத்தில்", கிளைக்கு ஒருவர் விதம் கலந்து கொள்வது.

03. திருச்செங்கோட்டில் 2017 நவம்பர் 3வது வாரத்தில் நடைபெறவுள்ள, TNTCWU ,மாவட்ட மாநாட்டிற்கு வேண்டிய உதவிகள் செய்வது.

04. எடப்பாடி தோழர் குடும்ப நிவாரண நிதி, தர்மபுரி தோழர்கள் குடும்ப நிவாரண நிதி பெருமளவு வசூலித்து உதவுவது.

05. LONGSTAY மாறுதலில், விருப்ப மாறுதல் வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதை கூட்டம் கவலையோடு பரிசீலித்தது. 20.09.2017 க்குள் நகர பகுதிகளுக்கு COUNSELLING நடத்தாமலும், ஊரக பகுதிகளுக்கு உத்தரவு வழங்காமலிருந்தாலும், தல மட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி, 21.09.2017, வியாழன் அன்று மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் மதியம் ஒரு மணிக்கு நடைபெறும். அதில், மாவட்டம் முழுவதுமிலிருந்து தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்வது.  

06. 21.10.2017 அன்று மதுரையில் நடைபெறவுள்ள "நவம்பர் புரட்சி" சிறப்பு கூட்டத்தில், திரளாக பங்கேற்பது. 

மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்