LONGSTAY மாறுதலின் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டிய, "விருப்ப மாறுதல்", மட்டும் வழங்காமல், மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், கோரிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 16.09.2017 அன்று நடைபெற்ற " கிளை செயலர்கள்" கூட்டத்தில், பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில், தல மட்ட போராட்டத்தில் ஈடுபட ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது, 20.09.2017 க்குள் நகர பகுதிகளுக்கு COUNSELLING நடத்தாமலும், ஊரக பகுதிகளுக்கு மாறுதல் உத்தரவு வழங்காமலிருந்தாலும், 21.09.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 21.09.2017, வியாழன் அன்று மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் மதியம் ஒரு மணிக்கு நடைபெறும்.
அதில், மாவட்டம் முழுவதுமிலிருந்து தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன், கேட்டு கொள்கிறோம்.
போராடாமல் பெற்றதில்லை! போராடி தோற்றதில்லை!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,
E . கோபால்,
மாவட்ட செயலர்