தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்டம், மகேந்திரமங்கலம் கிராமம் அருகே, 02.09.2017, நேற்று மாலை நடைபெற்ற சாலை விபத்தில், இளம் தோழர் ஜீவா Junior Engineer, மற்றும் தோழர் கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். மேலும் அந்த வாகனத்தில் சென்ற நான்கு தோழர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
நேரடி நியமனத்தில், சமீபத்தில் பணியமர்த்தப் பட்ட தோழர் ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர் கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு சேலம் மாவட்ட BSNL எம்ப்ளாயீஸ் யூனியன் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.
தோழர்களை பிரிந்த அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்