29.09.2017, நேற்று, CMD., BSNL ., திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை, டில்லியில், கார்ப்பரேட் அலுவலகத்தில், பிரதான சங்கங்களின் தலைவர்கள் சந்தித்தனர். அதாவது, நமது BSNLEU சங்க பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, NFTEBSNL பொது செயலர் தோழர் சந்தேஷ்வர்சிங், SNEA பொது செயலர் தோழர் செபாஸ்டியன், AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலாத்ராய் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.
கூட்டத்தில், CMD தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நமது தலைவர்கள் வைத்த கோரிக்கைகளை சுருக்கமாக:
01. BSNL நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி, வலைதள விரிவாக்கம், போட்டி சூழல், நமது யுத்திகளை முதலில் விளக்கினார்.
02. BSNL நிறுவனம் மொபைல் கருவியுடன் இணைப்புகளை ரூ. 2000/- மதிப்பில் வழங்கவுள்ளதாகவும், மாதம் ரூ. 97/- க்கு அளவில்லா அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். (இதே வசதிகளை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 1500/- க்கு , வழங்கினாலும், மாதம் ரூ. 150/- கட்டணம் செலுத்தவேண்டும்.)
03. 28.09.2017 அன்று புது டில்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், BSNL நிறுவனம் தான் எனது போட்டியாளர் என்று முகேஷ் அம்பானி புலம்பியுள்ளார். நமது CMD அவர்களை கூட்டத்தில் பாராட்டியுள்ளார். (CMD அவர்களை பாராட்டினால், ஒட்டுமொத்த ஊழியர்களையும் பாராட்டியதாக அர்த்தம்)
04. ஊதிய மாற்றம் சம்மந்தமாக நமது தலைவர்கள் கோரியபோது, தாம் எடுத்த முயற்சிகளை விவரித்தார். தொலைத்தொடர்பு செயலரும் நமது CMD அவர்களும் கூட்டாக மத்திய அமைச்சர் அவர்களை விரைவில் இந்த கோரிக்கைக்காக சந்திக்கவுள்தாக மேலும் தெரிவித்தார்.
05. ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யூ கோரியபோது, பண மதிப்பிழப்பு மற்றும் GST பிரச்சனைகளால் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், போனஸ் வழங்குவது சிரமம் என CMD தெரிவித்தார். ஆனால், நமது பொது செயலர் குறுக்கிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக நாம் மாறியுள்ளதற்கு, ஊழியர்களின் செயல் திறன் தான் காரணம், அதை மேலும் ஊக்க படுத்தும் விதமாக போனஸ் வழங்கவேண்டும் என கோரினார்.
06. GST நெருக்கடியை திறமையாக கையாண்ட கணக்கியல் அதிகாரிகளை தலைவர்கள் பாராட்டினார்கள்.
07. BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியம், பணிக்கொடை TRUSTகளில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என நாம் கோரியுள்ளோம்.
08. கேரளா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் 4G சேவையை BSNL துவங்கவுள்ளது. அதற்காக 2100MHz ஸ்பெக்ட்ரத்தை BSNL வாங்க உள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்