09.09.2017 அன்று, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின், சேலம் மாவட்ட செயற்குழு, BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, TNTCWU சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் தலைமை தாங்கினார்.
TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், அஞ்சலியுறை நிகழ்த்த, TNTCWU மாவட்ட உதவி தலைவர் தோழர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். BSNLEU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரை வழங்கினார். TNTCWU மாநில உதவி தலைவர் தோழர் செல்வம், BSNLEU சேலம் மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், BSNLEU இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் கந்தசாமி, வாழ்த்துரை வழங்க, கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
விவாதத்திற்கு பதில் அளித்தபின், கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் உண்ணாநோன்பில், திரளாக பங்கேற்பது, திருச்செங்கோட்டில் 2017 நவம்பர் 3வது வாரத்தில், மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது, அதற்குள் கிளை மாநாடுகள் நடத்தாத கிளைகள் கிளை மாநாட்டை நடத்தி முடிப்பது, இயக்கத்தில் புதிய தோழர்களை பெருமளவு இணைப்பது, சந்தா தொகையை வசூலிப்பது, தர்மபுரி மாவட்ட ஒப்பந்த தொழிலாளி குடும்ப நிவாரண நிதியை BSNLEU சங்கத்துடன் இணைந்து வசூலிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
தோழர் கந்தசாமி, நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்