அதன்படி, சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, இன்று,16.10.2017, PGM அலுவலகம் முன்பு, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர் M . சண்முகசுந்தரம் (AIBSNLEA), தலைமை தாங்கினார்.
SNEA மாவட்ட தலைவர் தோழர் V. சண்முகசுந்தரம் போராட்டத்தை துவக்கி வைத்து உரை வழங்கினார். AIBSNLEA மாநில நிர்வாகி தோழர் S . ராமசந்திரன், SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் விளக்கவுரை வழங்கினர்.
பின்னர், AUAB அமைப்பின் சேலம் மாவட்ட கன்வீனரும், BSNLEU மாவட்ட செயலுருமான தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும், விழா கால கொண்டாட்டங்கள் மத்தியிலும், சுமார் 150 தோழர், தோழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். SNEA மாவட்ட பொருளர் தோழர் G. சேகர் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU