BSNLEU மற்றும் TNTCWU தமிழ் மாநில சங்க அறைகூவலுக்கிணங்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000 வழங்கிடக்கோரி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 12.10.2017, வியாழக்கிழமை அன்று, காலை 10.30 மணியளவில், முதன்மை பொது மேலாளர் அலுவலகம், (சீரங்கபாளையம், சேலம் 7) வாயிலில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இரண்டு சங்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
சில பிரிவுகளில், இந்த மாத சம்பளமும், ஒப்பந்த ஊழியர்களுக்கு பட்டுவாடா செய்ய படாத நிலையுள்ளதால், உடனடியாக சம்பளம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
தோழர்களே! ஒப்பந்த ஊழியர்களுக்கான இந்த போராட்டத்தில், ஆர்ப்பரித்து கலந்து கொள்வோம்!. கோரிக்கைகளை வெற்றி பெற செய்வோம்!!.
தோழமையுடன்,
E . கோபால், C . பாஸ்கர்,
மாவட்ட செயலர் BSNLEU மாவட்ட செயலர், TNTCWU