Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, October 14, 2017

ஒப்பந்த ஊழியர் போனஸ் - சேலம் மாவட்டம் சாதனை!

Image result for சிகரம் தொட்ட சாதனை


ஒப்பந்த ஊழியர்களுக்கு, நியாயமான போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, BSNLEU & TNTCWU, இரண்டு மாவட்ட சங்கங்களும், கடந்த இரண்டு மாதங்களாக பல விதமான முயற்சிகளை செய்து வந்தது.  அதாவது, நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதுவது, பேட்டி கான்பது, கோரிக்கையை வலியுறுத்துவது, ஒப்பந்ததாரரை அனுகுவது, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என நமது பணி தொடர்ந்தது. 

ஒரு கட்டத்தில், பிரச்சனை தீர்வு காணப்படவில்லையென்றால், 16.10.2017 முதல் ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என நிர்வாகத்திடம் கடுமையாக தெரிவித்தோம். அதற்காக, 12.10.2017 அன்று சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தி, நேரில் மகஜர் வழங்கினோம்.

விளைவு, ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வில், முதல் முறையாக, குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000 என்ற உன்னதமான கோரிக்கை, நமது சேலம் மாவட்டத்தில் உத்தரவாதப்படுத்தபட்டுள்ளது. ஆம், Manpower Tender-ல் Rajaa & CO, Salem என்ற ஒப்பந்ததாரர் வசம் வேலை செய்யும் ( நகர மற்றும் ஊரக பகுதிகளில்) 45 ஒப்பந்த தொழிலாளர்கள், 9 மாத காலத்திற்கு (01.01.2017 to 30.09.2017) 7000/- ரூபாய் கணக்கீட்டில், நேற்று, 13.10.2017, ரூ. 5274.00 போனஸ் பெற்றுள்ளனர். 

அதே போல், சேலம் நகர பகுதிகளில்,
ஸ்ரீ வாரி ஒப்பந்ததாரர் வசம் பணி புரியும், 24 ஒப்பந்த தொழிலாளர்கள் அக்டோபர் 2016 முதல் ஜூலை 2017 வரையிலான 10 மாதங்களுக்கு,சுமார் ரூ. 5624/- வரை போனஸ் பெற்றுள்ளனர். 

இதன்மூலம், நமது சேலம் மாவட்ட சங்கங்கள் மகத்தான ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலியே 7000/- ரூபாய் அடிப்படையில் போனஸ் பெற்ற முதல் மாவட்டம், நமது சேலம் மாவட்டம் தான் என்று TNTCWU தமிழ் மாநில சங்கம் நம்மை பாராட்டியுள்ளது.

மீதமுள்ள மல்லி, பாலாஜி உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களும், 16.10.2017, திங்கள் அன்று பட்டுவாடா செய்வார்கள் என மாவட்ட நிர்வாகம் நமக்கு உறுதி அளித்துள்ளனர். 

தொடர்ச்சியான, நேர்த்தியான, சக்திமிக்க, போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தோற்றதில்லை, தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை !

கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை !!

இன்குலாப் ஜிந்தாபாத்!!!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்