நமது BSNLEU மத்திய சங்கத்தின் கடும் முயற்சியின் பலனாக, 2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான JE (பழைய TTA) இலாக்கா போட்டி தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு CORPORATE அலுவலகத்தால் 16/10/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
மொத்தக்காலியிடங்கள் = 8834
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC பிரிவு = 591 SC பிரிவு=122 ST பிரிவு= 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் = 15/12/2017 முதல்
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் = 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் = 28/01/2018
தேர்வு ONLINE முறையில் நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு OBJECTIVE ரகம். தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும். (NEGATIVE MARKS)
01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.
01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும். ரூ.9020 – 17430 சம்பள விகிதத்தில் இருக்க வேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தோழர்களே தேர்வுக்குத் தயாராகவும்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
அறிவிக்கை
தேர்வு அறிவிக்கை (மாநிலங்கள்) மாதிரி
காலியிடங்கள்
பாடத்திட்டங்கள்
காண சொடுக்கவும்