BSNLல் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 7000 போனஸ், PLI, வழங்க வலியுறுத்தி, 13.10.2017 அன்று, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, நமது மாவட்ட சங்கம் சார்பாக, 13.10.2017 நேற்று, மாலை, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S . ராமசாமி, M . சண்முகம், மாவட்ட உதவி பொருளர் தோழர் P .M . ராஜேந்திரன், ஆகியோர் விளக்கவுரை வழங்கியபின், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், சிறப்புரை வழங்கினார். சேலம் MAIN தொலைபேசி நிலைய கிளை செயலர் தோழர் C . காளியப்பன் நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்