Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 3, 2017

நாமக்கல்லில் ஒரு தள மட்ட போராட்டம்



BSNLEU நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைகள் சார்பாக இன்று, 03.11.2017,  தள மட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. 

நாமக்கல் நகர OD பகுதியில், காலம் காலமாக கடைபிடிக்கப்படும் Section Trasnfer முறையை நீண்ட நாட்களாக, கோட்ட நிர்வாகம் அமுல்படுத்தாமல் இழுத்து அடித்து வந்தது. நமது கிளை சங்கங்கள், மாவட்ட சங்க வழிகாட்டுதல் படி, பல முறை நிர்வாகத்துடன் பேசியது. பல முயற்சிகளுக்கு பின், 30.08.2017 அன்று Counselling நடத்தப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 12 Section களுக்கு நடத்தப்பட்ட Counsellingல் ஒரு Sectionல் மட்டும் உத்தரவு அமுலாகாத நிலை நீடித்தது. 

இதனை கண்டித்து நமது கிளை சங்கங்கள் பல முறை நிர்வாகத்துடன் பேசியும் பிரச்சனை தீராத நிலையில், இன்று கண்டன ஆர்ப்பாட்ட நடத்த போராட்ட அறைகூவல் கொடுத்தது. 

சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க, நாமக்கல் கிளை தோழர்கள் காலை முதலே பெரும் திரளாக தொலைபேசி நிலைய வளாகத்தில் திரண்டனர். மாவட்ட சங்க நிர்வாகிகளுடன் அருகாமை கிளை சங்க தோழர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர்கள் தோழர்கள் ராஜகோபால், செல்வராஜ் கூட்டு தலைமை தாங்கினர். கிளை செயலர்கள் தோழர்கள் பாலசுப்ரமணியம், சின்னசாமி முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட உதவி செயலர்கள், தோழர்கள் M . சண்முகம், S . ராமசாமி, S . ஹரிஹரன் கோரிக்கை  விளக்க உரை வழங்கினர்.

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி மாநில சங்கம் சார்பாக வாழ்த்தி, சிறப்புரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேரூரை வழங்கினார். 

பின்னர், நிர்வாகத்துடன் பெரும் திரளாக சென்று முறையிட்டு, பேச்சு வார்த்தை நடத்தினோம். நிர்வாக தரப்பில் திருமதி உமா, DGM, திரு. இளங்குமரன் DE, திரு. செல்வராஜ் SDE ஆகியோர் கலந்து கொண்டனர். நமது தரப்பு நியாயத்தை உணர்ந்த நிர்வாகம் உடனடியாக பிரச்னையை தீர்க்க சாதக உத்தரவு வெளியிட்டது. உத்தரவு நகலை உடனடியாக நமக்கு வழங்கியது. பிரச்னையை தீர்த்து வைத்த நாமக்கல் கோட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள்.

சங்கம் அறைகூவல் கொடுத்தவுடன் பெரும் திரளாக திரண்ட தோழர்களுக்கு பாராட்டுக்கள்.  போராட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . கனகராஜ், P . தங்கராஜு, P . M . ராஜேந்திரன், M . பன்னீர்செல்வம், R . செல்வம், R . ஸ்ரீனிவாசன், கிளை செயலர்கள் தோழர்கள் R . கோவிந்தராஜூ (ராசிபுரம்), 
N . பாலகுமார் (GM அலுவலகம்), M . ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), K . ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), R . ரமேஷ் (பரமத்தி வேலூர்), நாமக்கல் மூத்த தோழர்கள் V.கோபால், K .M . செல்வராஜ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்