All Unions and Associations of BSNL, மத்திய மாநில சங்க அறைகூவலுக்கிணங்க, சேலத்தில் 23.11.2017 அன்று, மனித சங்கிலி போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), V .சண்முகசுந்தரம் (SNEA), மணிகண்டன் (AIBSNLEA), கூட்டு தலைமை தாங்கினர் .
முதலில் வந்திருந்த தோழர்கள் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை துவங்கி கோட்டை மாரியம்மன் கோயில் வரை (சுமார் 350 தோழர்கள் - 75 பெண்கள் உட்பட) கரம் கோர்த்து ஒரு மணி நேரம் மனித சங்கிலியாக நின்றனர். ஒரு குழுவாக தோழர்கள் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
பின்னர் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் பழனிசாமி (SNEA CEC உறுப்பினர்), M . சண்முகசுந்தரம் (மாவட்ட செயலர் AIBSNLEA), P . கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலர், TEPU), C . கமலக்கூத்தன் (மாவட்ட செயலர், FNTO), ஆகியோர் விளக்கவுரை வழங்கினர்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, SNEA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M .R .தியாகராஜன், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
தோழர் சந்திரசேகரன், (SNEA) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதுலுமிருந்து திரளாக ஊழியர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டது, இரண்டு நாள் வேலை நிறுத்தம் நமது மாவட்டத்தில் வெற்றி பெற போவது உறுதி என்பதை பறைசாற்றியது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்