அகில இந்திய சங்கங்களின் அறைகூவல்படி, நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், உயர்த்திரு. P .R .சுந்தரம் அவர்களை இன்று,(03.12.2017) நேரில் சந்தித்து மகஜர் வழங்கினோம். ALL UNIONS AND ASSOCIATIONS சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக MP அவர்களை இன்று காலை ராசிபுரத்தில், அவரது இல்லத்தில், சந்தித்து மகஜர் வழங்கினோம். நமது கோரிக்கைகள் சம்மந்தமாக மாண்புமிகு P. R. சுந்தரம் அவர்களிடம் விவாதித்தோம்.
நிகழ்வில் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம், FNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன், TEPU மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் N . செல்வராஜ், P . தங்கராஜ், P .M .ராஜேந்திரன், P . செல்வம், கிளை செயலர் தோழர் R . கோவிந்தராஜ், SNEA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் G. சேகர், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ராசிபுரம் தொலைபேசி நிலையத்தில், அனைத்து சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 06.12.2017 அன்று சேலத்தில், மாநில தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம், இரண்டு நாள் வேலை நிறுத்தம் போன்ற இயக்கங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க, முடிவுகள் எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்