Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 15, 2017

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம்

Image result for p ramamoorthy

டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம் என்றுதோழர் என்.சங்கரய்யா வர்ணிப்பார்.அவரோடு இணைந்து பணியாற்றியவர்களும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களும் இது சத்தியமான வார்த்தை என்பதை ஒப்புக் கொள்வார்கள். மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார் பி.ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி தொண்டராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர். அகில இந்திய, தமிழகஅரசியலில் அவர் ஆற்றியுள்ள பணி மிக மிக முக்கியமானது. தமிழகத்தில் தோழர்கள் பி.சீனிவாசராவ், ஜீவா உள்ளிட்ட தலைவர்களோடு இணைந்து பி.ராமமூர்த்தி ஆற்றியுள்ள பணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்த க்கது. கும்பகோணம் அருகில் உள்ள வேப்பத்தூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வேத விற்பன்னரான பஞ்சாபகேசசாஸ்திரி -லட்சுமி அம்மாளின் புதல்வராக 1908 ஆம் ஆண்டுசெப்டம்பர் 20 ஆம் தேதி பி.ராமமூர்த்தி பிறந்தார். வேப்பத்தூரிலும் பின்னர் சென்னை இந்து மேல்நிலைப்பள்ளியிலும் அவர் பயின்றார். 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ்கட்சி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேற வேண்டும் என அறைகூவல் விடுத்தது.அப்போது 12 வயதே ஆன பி.ராமமூர்த்தி வீட்டிற்கு தெரியாமல் அலகாபாத் சென்று நேரு மற்றும் பி.தாண்டன்ஆகியோரால் நடத்தப்பட்ட தேசியப் பள்ளியில்சேர்ந்தார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பி கல்வியைத் தொடர்ந்தார். 

கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக...

1926 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அக்கல்லூரியின் முதல்வர்பைசன் என்பவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கே ற்றால், கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுவேன் எனமிரட்டியதால், ஆத்திரமடைந்த பி.ராமமூர்த்தி மீண்டும் காசிஇந்துப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். 1930ஆம் ஆண்டு இளம் அறிவியல் படிப்பை முடிக்க விருந்த நிலையில், அந்நிய துணிகளை எரித்ததற்காக கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்ப ட்டது. சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மறியலில் ஈடுபட்ட தற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் 6 மாதம் சிறையில்அடைக்கப்பட்டார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி க்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தேர்வு செய்ய ப்பட்டார். காங்கிரஸ்காரராக இருந்த பி.ராமமூர்த்தியை க ம்யூனிஸ்ட் இயக்கப் போராளியாக மாற்றியதில், தோழர்கள்அமீர் ஹைதர்கான், பி.சீனிவாசராவ் ஆகியோருக்கு முக்கி யப் பங்கு உண்டு. 1936 ஆம் ஆண்டு தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையில்பி.ராமமூர்த்தி மற்றும் 8 பேர்உறுப்பினர்களாக இருந்தனர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்ததிலும், பல்வேறு தொழிற்சங்கங்களை உரு வாக்கியதிலும் பி.ஆருக்கு மகத்தான பங்கு உண்டு. கம்யூ னிஸ்ட் கட்சிக்காக ஜனசக்தி ஏட்டை உருவாக்குவதில் பி.ராமமூர்த்தி சிறந்த பங்காற்றினார். குற்றப்பரம்பரை சட்ட த்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்நடத்திய போராட்டத்திலும் பி.ராமமூர்த்தி அவருக்கு துணை நின்றார். சென்னை திருவல்லிக்கேணி ஆலய தர்மகர்த்தா தேர்தலில் அருந்ததிய மக்களை வாக்களிக்கச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு. 

வழக்கு மன்றத்தில் பிரச்சார புயல் 

கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க வேண்டும் என்பதற்காக கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, சென்னைசதி வழக்கு,மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்குஎன அடுக்கடுக்காக வழக்குகளை தொடுத்து பொதுவுடமை இயக்கத்தை ஒடுக்கி விட முய ன்றது ஏகாதிபத்திய அரசு. 1940 ஆம் ஆண்டு சென்னைசதி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களில் தோழர் ஆர்.உமாநாத் அவர்க ள்தான் வயதில் மிகவும் இளையவர். இந்த சதிவழக்கில் பி.ராமமூர்த்திக்கு 4 ஆண்டுகள் கடுங்கா வலும், தோழர் மோகன் குமாரமங்கலத்திற்கு மூன்ற ரை ஆண்டுகள் கடுங்காவலும், ஆர்.உமாநாத்திற்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவலும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மன்ற மேடையை கம்யூனிஸ்ட்களின் பிரச்சார மேடையாக மாற்றியவர் பி.ராமமூர்த்தி.1946 ஆம் ஆண்டு இடைக்கால அரசு ஏற்பட்ட நிலையில்,ஹார்வி மில் நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர். அன்றைய கம்யூனிஸ்ட் மற்றும்காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் அதில் பங்கேற்றுஆதரவளித்தனர். வரதராஜூலு நாயுடுஎன்பவர் தலைமையில் நிர்வாக ஆதரவு தொழிற்சங்கம் செயல்பட்டது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் மூலதனத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பி.ராமமூர்த்தியும், இரண்டாவது குற்றவாளியாக என்.சங்கரய்யாவும், மூன்றாவது குற்றவாளியாக கே.டி.கே.தங்கமணியும் சேர்க்கப்பட்டனர். ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், எஸ்.கிருஷ்ணசாமி, எஸ்.பாலு, ஆர்.கே. சாந்துலால், மணவாளன், ஆர்.வி.சித்தா, ப.மாணிக்கம், எம்.முனியாண்டி போன்றவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்த காலத்தில் ஜாமீன் கூட மறுக்கப்பட்டது. இந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் பி.ராமமூர்த்தி திறம்பட வாதாடினார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 7 மணிக்குத்தான் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, மதுரை தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததாக என்.சங்கரய்யா அடிக்கடி குறிப்பிடுவார். முதலாளிகளின் மூலதனத்திற்கு ஆபத்து வருமானால், எத்தகைய கொடும் வழக்கையும் சுமத்தஆளும் வர்க்கம் தயங்காது என்பதற்கு மதுரை சதி வழக்கு ஒரு உதாரணம் என்றால், தற்போது ஹரியானா மாநில த்தில் மாருதி சுசுகி ஆலையில் போராடிய தொழிலாள ர்களை கைது செய்து, ஜாமீனில் கூட வெளியே விட மறுத்துதண்டனை வழங்கப்பட்டுள்ளது இப்போதைய உதாரணமா கும். இவர்களை ஜாமீனில் வெளியே விட்டால், தொழில் அமைதி கெட்டு விடும். முதலீடு பாதிக்கப்படும் என்றுஹரியானா நீதிபதி கூறினார். நாடு விடுதலைப் பெறுவதற்கு முன்பும் பின்பும் முதலாளி வர்க்கத்தின் குணமும்அவர்களுக்கு ஏவல் செய்யும் அமைப்புகளின் குணமும் ஒரே மாதிரியாகவே உள்ளன. 

பன்மொழி வித்தகர்

1959இல் நான் பணியாற்றிய பேட்டைவாய்த்தலை காவிரி சர்க்கரை ஆலையில் தோழர் ஆர்.உமாநாத் தலைமையில், 100 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்ற நிலையில், 1960 ஆம் ஆண்டு பேட்டை வாய்த்தலையில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் தோழர்பி.ராமமூர்த்தியின் உரையை நான் முதன் முதலாக கேட்டேன். மேடையில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் பல மணி நேரம் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர் அவர்.அதன்பின்பும் அவருடன் நெருங்கிப் பழகவும், இணைந்துபணியாற்றவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.1966 ஆம் ஆண்டு ஏஐடியுசி அகில இந்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. பொதுச் செயலாளராக இருந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே உரையாற்றினார். அவரதுபேச்சை நான் மிகவும் ரசித்தேன். அடுத்து, தோழர் பி.ராம மூர்த்தி முக்கால் மணி நேரம் பேசினார். எஸ்.ஏ.டாங்கே உரையில் உள்ள குறைபாடுகளையும் காங்கிரஸ்அரசின் ஆதரவுப் போக்கையும் தன்னுடைய வாதத்திறமையால் பி.ஆர். அம்பலப்படுத்தினார். ஏஐடியுசி அமைப்பு க்குள் தத்துவார்த்த ரீதியான மோதல் நடந்து கொண்டி ருந்த காலம் அது. மாநாட்டில் எஸ்.ஏ.டாங்கே பேச்சுக்கு மொழிபெயர்ப்பு இருந்தது. ஆனால், பி.ஆர். பேச்சுக்கு மொழி பெயர்ப்பு இல்லை. மாநாட்டு பந்தலில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அமர வைத்து, தமிழிலும்இந்தியிலும் தான் பேசியது என்ன என்பதை பி.ஆர்.விளக்கினார். பல மொழிகளில் வித்தகராக அவர் விளங்கினார். 1980 ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் கே.வரதராசன் இருந்தார். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கியது. தோழர் பி.ராமமூர்த்தி பிரச்சாரம் செய்ததோடு கட்சிக்கு தேர்தல் நிதிகிடைக்கவும் பெருமளவு உதவினார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தோழர்கள் எம்.கல்யாணசுந்தரம், கே.அனந்தநம்பியார் போன்றவர்கள் வெற்றி பெற்று, பணியாற்றியுள்ளனர். எனவே அந்தத் தொகுதியில் கட்சி போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோழர்பி.ராமமூர்த்தி கூறி, அந்தத் தொகுதியில் போட்டியிட வைத்தார்.ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி போன்ற தமிழகதலைவர்களோடு மட்டுமின்றி நேரு, ஜெயப்பிரகாஷ் நாரா யணன், இந்திரா காந்தி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ரா மன் போன்ற அகில இந்திய தலைவர்களோடும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. தமக்குஇருந்த தொடர்புகளை பயன்படுத்தி கட்சிக்கும், தொழிற்சங்கத்திற்கும் நிதி திரட்டித் தருவதில் பி.ஆர்க்குநிகர் பி.ஆர்.தான். விடுதலைக்கு முன்னும் பின்னும்சிறை வாழ்க்கை மட்டு மின்றி தலைமறைவாக இரு ந்தும் அவர் இயக்கப் பணியாற்றியுள்ளார்.1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமி ழகத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. அதன்பிறகுகாங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதற்கான கூட்டணியை உருவாக்கியதில் பி.ராமமூர்த்திக்கும் முக்கியமான பங்கு உண்டு.அந்தக் கூட்டணியில்பொருளாதாரக் கொள்கையில் எதிரெதிர் துருவங்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி யும் முஸ்லீம் லீக் கட்சியும் இடம்பெற்றன. அகில இந்தியகட்சிப் பணிக்கு சென்றிருந்த காமராஜர் மீண்டும் தமிழகஅரசியலுக்கு வந்தபோதும், காங்கிரசினால் வெற்றி பெறமுடியவில்லை. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, கூட்டணி அரசியலுக்கு திமுக வந்தது. பிரதேச முதலாளித்துவ கட்சிகள் குறித்து தெளிவானதொரு பார்வை பி.ராமமூர்த்திக்கு இருந்தது. அண்ணா தலைமையிலான திமுக, பிரதேச முதலாளிகளின் நலனுக்காகவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்தது. முரண்பட்ட கட்சிகளை பொது நோக்கத்திற்காக இணைத்து, வெற்றி பெறச் செய்ததில் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. தமிழகத்தின் 

தொழில் வளர்ச்சியில்...

தமிழகத்தில் ஏராளமான தொழிற்சங்கங்களை உருவாக்கி, தலைமை தாங்கி, போராட்டங்களை வழி நடத்தியது மட்டுமின்றி , தமிழக தொழில் வளர்ச்சிக்கும் பி.ராமமூர்த்தி ஆற்றியுள்ள பணி என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நெய்வேலி அனல்மின் நிலை யம் அமைந்ததில் தோழர் பி.ராமமூர்த்திக்கு முதன்மை யான பாத்திரம் இருந்தது. நெய்வேலியில் மின் உற்பத்திநிலையம் அமைப்பது லாபகரமாக இருக்காது என்றுஅன்றைய தொழில்துறை அமைச்சர் டி.டி.கிருஷ்ண மாச்சாரி கூறிய நிலையில், கிழக்கு ஜெர்மனியில் தாம் நேரில் பார்த்த அனுபவத்தை எடுத்துரைத்து, வாதாடி,நெய்வேலியில் அனல் மின் நிலையம் அமைய காரணமாகபி.ஆர். இருந்தார் என்பதை இன்றைய இளைய தலைமுறைஅறிந்து கொள்ள வேண்டும்.1978 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்,மேற்கு ஜெர்மனியின் சீமென்ஸ் என்ற நிறுவனத்துடன் உடன்பாடுஏற்படுத்த முயன்றார். அந்த உடன்பாடு நிறைவேறியிருந்தால், திருச்சி பெல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கப்பட்டு, வெறும் விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கும். இதனை முன்னுணர்ந்து, பி.ராமமூர்த்தி பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ‘சீமென்ஸ்ஒப்பந்தம் சீரழிவுப் பாதைக்கே’ என்ற தலைப்பில் அவர்எழுதிய நூல் பல்லாயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. இதனால் அந்த ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெல் நிறுவன தலைவராக இருந்து பின்னர் தொழில்துறை செயலாளராக பதவிஉயர்த்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஎன்டியுசி உள்ளிட்ட சில தொழிற்சங்க தலைவர்களை அழை த்து சிஐடியு அமைப்பையே ஒழித்து விட வேண்டும். அதற்கு நான் துணை செய்கிறேன் என்று தூண்டிவிட்டார். ஆனால்,பி.ஆர். அவருடைய ஊழல்களை அம்பலப்படுத்தி தொழில்துறை செயலாளர் பதவியிலிருந்து அவரை அகற்றினார். மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தவர் தோழர் பி.ராமமூர்த்திதான். தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் அவையில் இருக்க முடியாத சூழலால் தோழர் பூபேஷ் குப்தா அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அண்ணா வழிமொழிந்து பேசினார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து தமிழில் பேசிய முதல் தலைவரும் அவரே.தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாகவும் , பயிற்றுமொழியாகவும் இருக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை இன்றும் பொருத்தமுடையது. விடுதலைக்குப் பின்பு 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் படியே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றால் மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும். அதே மதுரையில் தொழிலாளி வர்க்கம் அவருக்கு சிலை அமைத்து கௌரவித்துள்ளது.

திருமண வரவேற்பில் தந்தை பெரியார் 

தோழர் பி.ராமமூர்த்தி, அம்பாள் திருமணம் 1952 ஆம்ஆண்டு எளிமையாக நடைபெற்றது. பின்னர் தந்தை பெரியார் தலைமையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பொன்மலையில் இருந்த நடேசன் - ஜெகதாம்பாள் தம்பதியினர் குடும்பம் ஒரு கட்சிக்குடும்பம். அவருடைய நான்கு மகள்களும் கட்சித் தோழர்களையே திருமணம் செய்து கொண்டனர். மூத்தவரான ராஜம்,பி.புருஷோத்தமனையும், அடுத்தவரான யமுனா, தோழர்கே.முத்தையாவையும், மூன்றாவது புதல்வியான ஞானம்தோழர் மாதவனையும் திருமணம் செய்து கொண்டனர். கடைசி மகளான அம்பாளை பி.ஆர். திருமணம் செய்துகொண்டார். தோழர் பி.ராமமூர்த்தி - அம்பாள் தம்பதி யினருக்கு பொன்னி, வைகை என இரு மகள்கள் உள்ளனர்.பொன்னி மருத்துவர் தோழர் வைகை தொழிலாளர்களின் மதிப்பு மிக்க வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தீக்கதிரை நிலை நிறுத்தியதிலும் மதுரையில் உள்ளதீக்கதிர் அலுவலக இடம் கட்சிக்கு கிடைத்ததிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிக முக்கிய பங்கு உண்டு.


CITU ஸ்தாபக தலைவர் 


தொழிலாளர்களின் படை வீடாக விளங்கும் சிஐடியு அமைப்பை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் ஒருவர் தோழர் பி.ராமமூர்த்தி. அந்த அமைப்பின் முதல்பொதுச் செயலாளராக பணியாற்றினார். தோழர். பி.டி.ரணதிவே அந்த அமைப்பின் முதல் தலைவர். தோழர் பி.ராமமூர்த்தியின் பெயரால் தில்லியில்பிரம்மாண்டமான கட்டிடம் சிஐடியுவின் பெரும் முயற்சியினால் உருவாக்கப்பட்டு, அவரது 30ஆவது நினைவு தினமான வெள்ளியன்று திறப்பு விழாகாண்கிறது. தொழிலாளர்களுக்கு தத்துவ பயிற்சி அளிக்கும் கல்வி மற்றும் ஆய்வு மையமாக அது செயல்பட உள்ளது. இது அவருக்குச் செய்யப்படும் பொரு த்தமான மரியாதை ஆகும். நாடு முழுவதும் உள்ள சிஐடியுதோழர்கள் இதற்கான நிதியை மனமுவந்து வழங்கி யுள்ளனர்.தோழர் பி.ராமமூர்த்தி மறைவின்போது, இறுதி நிகழ்ச்சியில் உரையாற்றிய தோழர் பி.டி.ரணதிவே கண்ணீரோடு தன்னுடைய உரையை முடிக்கும் போது, மகாகவிகாளிதாசனின் கவிதையோடு முடித்தார்.“உன்னுடைய வாழ்க்கையை விவரித்தப் பின்னரும்பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமானவார்த்தைகள் உள்ள என்றால் அதன்பொருள் உன்னைப் பற்றி சொல்ல வேண்டியதை-யெல்லாம் சொல்லிவிட்டோம் என்பதல்ல;ஆனால் உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வதற்குநாங்கள் சக்தியற்றவர்களாகயிருக்கிறோம் என்றகாரணத்தால் தான்.”ஆம். தோழர் பி.ராமமூர்த்தியின் வரலாறு , வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது.

நன்றி - என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள பி.ஆர். வரலாற்று நூல்கள்

Image result for t k rangarajan
Image result for theekkathir