இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தின்,
முதல் நாளான, இன்று (12.12.2017), போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். வாழ்வா? சாவா? போராட்டம் என்றாலும், நமது மாவட்டத்தில் விடுப்பு எடுக்கும் கலாச்சாரம் மாறவில்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, சுமார் 91 சதவீத ஊழியர்கள்/அதிகாரிகள் பணியை புறக்கணித்துள்ளனர், என்றாலும் நேரடியாக வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றவர்கள் 62 சதவீதம் மட்டுமே என்பதை மாவட்ட சங்கம் கவலையோடு பார்க்கிறது.
நாளை, 13.12.2017 போராட்டத்தில், பங்குபெறும் தோழர்களின் எண்ணிக்கையை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாவட்ட சங்கம் முழு விவரங்களையும் புள்ளி விவரங்களாக கீழே பிரசுரிக்கிறது.
கிளை செயலர்கள் புள்ளி விவரங்களை ஆழமாக ஆராய்ந்து, எஞ்சியுள்ள குறிகிய கால அவகாசத்தை திட்டமிட்டு பயன்படுத்தி, 13.12.2017 அன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்போர் எண்ணிக்கை சதவீதத்தை அதிகரிக்க முனைப்பு காட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
சேலம் மாவட்டத்தில்:
மொத்த ஊழியர்கள் (Executive/Non-Executive): 1120
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றவர்கள் : 695 (62.05%)
விடுப்பு எடுத்தவர்கள் : 316 (28.21%)
பணி புரிந்தவர்கள் : 109 (9.73%)
அதிகாரிகள் சம்மந்தமான விவரங்கள்:
மொத்த அதிகாரிகள் : 221
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 92 (41.62%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 92 (41.62%)
பணி புரிந்த அதிகாரிகள்: 37 (16.74%)
ஊழியர்கள் சம்மந்தமான விவரங்கள்:
மொத்த ஊழியர்கள் : 899
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 603 (67.07%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 224 (24.91%)
பணி புரிந்த ஊழியர்கள்: 72 (8.00%)
ஒட்டுமொத்தமாக பணிக்கு வராத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை:1011(90.26%)
வேலை நிறுத்தம்: 695 (62.05%) மற்றும் விடுப்பு : 316 (28.21%)
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்