Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 13, 2017

போராட்டம் வெற்றி!...நெஞ்சுநிறை நன்றி !!...



அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்த்து, BSNL நிறுவனத்தை காக்க, இரண்டு நாள் வேலை நிறுத்தம், நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நிறுவனத்தை காக்க நடைபெற்ற இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் நமது மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

All Unions and Associations of BSNL என்ற பதாகையின் கீழ், நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, TEPU சங்க தலைவர்கள், தோழர்கள் கடுமையாக உழைத்தனர். மாநில தலைவர்களை வைத்து சிறப்பு கூட்டங்கள், மாவட்ட செயற்குழுக்கள், கிளை கூட்டங்கள், ஊழியர் சந்திப்பு இயக்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு, தர்ணா, மனித சங்கிலி. ஆர்ப்பாட்டம் என எத்தனை.. எத்தனை.. இயக்கங்கள்....

டந்த 50 நாட்களாக, இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க அயராது பாடுபட்டு, கள பணியாற்றிய அனைத்து சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் அனைவரின் பணியும் பாராட்டுக்குரியது.

அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை  எதிர்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலை நிறுத்தத்தில், பங்குபெற்று, இரண்டு நாள் ஊதியத்தை இழந்து, தங்களை போர்ப்படை வீரர்களாக பிரகடனப்படுத்தி கொண்ட சேலம் மாவட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு AUAB அமைப்பின் செவ்வணக்கம்..

"அடுக்கப்பட்ட மூட்டையில், அடி மூட்டை", நிரந்தரமாகாத பணி, குறைவான கூலி,  வெளி ஆட்கள் என்று அரசாங்கம் செய்யும் ஏளனம் என்றாலும், எங்களின் உயிர் மூச்சு BSNL நிறுவனம் தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம், மாவட்டம் முழுவதும், இரண்டு நாள் கூலியை இழந்து, 100 சதம் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் பெரும் பாராட்டுக்கும் கௌரவத்திற்கும் உரியவர்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

இலாக்காவில் இருந்து ஓய்வு பெற்றாலும், 100 சதம் மத்திய அரசு நிதியிலிருந்து ஓய்வூதியம் பெற்றாலும், இது என்னுடைய நிறுவனம் என்ற அக்கறையோடு, தார்மிக ஆதரவு அளித்து நம்மை ஊக்க படுத்திய ஓய்வூதியர்களுக்கும் நமது நன்றி.

போராடாமல் பெற்றதில்லை! போராடி தோற்றதில்லை!!


இன்குலாப் ஜிந்தாபாத்!!!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
அதிகாரிகள்-ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பிற்காக....


Image result for நெஞ்சுநிறை நன்றி !