அந்த முடிவின்படி, இன்று, (30.12.2017) சேலத்தில், மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், BSNLEU மாவட்ட தலைவர் மற்றும் தோழர் M செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் கூட்டு தலைமை தாங்கினர்.
TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கரன், துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், M . பன்னீர் செல்வம், P.M.ராஜேந்திரன், R . ஸ்ரீனிவாசன், TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P. செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பின்னர் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார்.
TNTCWU மெய்யனுர் கிளை நிர்வாகி தோழர் விஜயகுமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்(30 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.
பின்னர், DGM (HR/Admn) அவர்களிடம் பெரும் திரளாக சென்று கோரிக்கை மகஜர் வழங்கினோம். AGM (HR/Admn) முன்னிலையில், DGM (Planning) அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விவாதித்தார். நிர்வாகம் சார்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க DGM உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்