Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 30, 2017

ஒப்பந்த ஊழியர் சம்பளம் - புதிய உத்தரவு

Image result for ministry of labour

ஒப்பந்த ஊழியர்களுக்கு, நவம்பர் மாத சம்பளம் மாநிலம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படாத நிலையில், BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவக்கினங்க கடந்த ஒரு வார காலமாக, காத்திருப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தினோம்.  Dy.CLC, சென்னை அவர்களிடம் புகார் மனு அளித்தோம்.

அதன் அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு, பிரதி மாதம் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டியது BSNL நிர்வாகத்தின் அடிப்படை கடமை என்று Dy.CLC உத்தரவு வெளியிட்டுள்ளார். அதாவது, ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்றால், PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNL நிர்வாகம் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். அது தவறும் பட்சத்தில், பத்து மடங்கு சம்பள தொகை அடிப்படையில், அபராதம் கொடுக்க வேண்டும் என கறார் உத்தரவு வழங்கியுள்ளார். 

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வழி காட்டுதலாகும். நாம் நடத்திய தொடர் போராட்டங்கள் ஒப்பந்த ஊழியர் வாழ்வில் ஒரு சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்